Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பிறந்தநாளில் வரப்போகும் டபுள் அப்டேட்… ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளில் வரப்போகும் டபுள் அப்டேட்… ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்
, செவ்வாய், 7 ஜூன் 2022 (09:30 IST)
விஜய் பிறந்தநாளில் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக விஜய் – லோகேஷ் இணையும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”டான் கம்மி பட்ஜெட்தான்… 100 கோடியும் எனக்கு இல்ல”… சிவகார்த்திகேயன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!