Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் ரீமேக்கா? லியோ குறித்த கேள்விக்கு லோகேஷின் பதில் இதுதான்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:07 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் இன்னும் படத்தின் ரிலீஸுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் படம் பற்றி பல தகவல்கள் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. மேலும் படத்தின் டிரைலரை வைத்து இந்த படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் என கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுபற்றி கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் எந்த பதிலும் சொல்லாமல் இன்னும் சில நாட்களில் படம் ரிலீஸ் ஆகப் போகிறது. அதனால் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்று மட்டும் கூறி நழுவியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments