Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் மேனேஜர் மீது கோபம் ? - தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு

முன்னாள் மேனேஜர்  மீது கோபம் ? - தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு
, வியாழன், 3 ஜனவரி 2019 (17:03 IST)
நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராகவும் குடும்ப நண்பராகவும் இருந்த பி.டி. செல்வக்குமாரை விஜய் தனது நெருங்கிய வட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் ஆரம்பக் காலம் முதல் அவருக்கும் அவரது படங்களுக்கும் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் பிடி செல்வக்குமார். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளரான இவர் விஜய்யின் பி.ஆர். ஓ. என்ற பெயர் பிளஸ்ஸாக அமைந்ததால் பலப் படங்களுக்குப் பி.ஆர்.ஓ. ஆகவும் வேலை செய்திருக்கிறார். மேலும் ஒன்பதுல குரு என்ற படத்தை இயக்கியும் விஜய் நடித்த புலி உள்ளிட்ட சிலப் படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

விஜய்க்கும் இவருக்கும் இருந்த நட்புக் காரணமாக விஜய் இவர் தயாரிப்பில் புலி படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். படம் ஆரம்பித்தபோது இருந்த நட்பு படம் முடியும் போது இல்லை என்று கூறப்படுகிறது.புலிப் படக் கணக்கு வழக்குகளில் மற்றொரு தயாரிப்பாளரான சிபு வுக்கு ஒழுங்காக கணக்கு வழக்குகளைக் காட்டாமல் ஏமாற்றியும் பட ரிலிஸ் செய்யும் சமயத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் விஜய்க்கு 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
webdunia

இதனால் விஜய் தனது நட்புப் பட்டியலில் இருந்து இவரை ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. விஜய் ஒதுக்கியப் பின்பும் விஜய்யின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார் செல்வக்குமார். அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைக்குரிய செயல்களை செய்து தனது இருப்பை அடையாளப்படுத்திக் கொள்வார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக வில் சேர்ந்து உடனடியாக விலகியது, சமீபத்தில் இளையராஜா மீது தயாரிப்பாளர்களின் சார்பில் வழக்குத் தொடுத்தது உள்ளிட்டவை இதில் அடக்கம்.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ’விஜய் முன்பெல்லாம் சக நடிகர்களை போட்டிக்கு அழைப்பது போன்ற செயல்களை விரும்புவார்’ என இவர் அளித்த பதிலால் விஜய் தரப்பு இவர் மீது கடும்கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தனது மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் ஆனந்த் மூலம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
webdunia

அந்த அறிக்கையில் ‘ நமது தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஒருவர் தற்போது அந்த பணியில் இல்லை. மேலும் அவர், நமது மக்கள் இயக்கத்தில் எந்நாளும் எந்த பதவியும் வகித்ததில்லை. சம்மந்தப்பட்ட நபர் தனது சொந்தக் கருத்தை விஜய்யின் கருத்தைப் போல ஊடகங்களில் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும் நமது தளபதி எக்காலத்திலும் சக நடிகர்களை இழிவாகப் பேசுதல், போட்டிக்கு அழைப்பது  போன்ற காரியங்களில் ஈடுபட்டது இல்லை. ஆகவே இதுபோல தனது கருத்துகளை விஜய்யின் கருத்துகள் போலக் கூறுபவர்களின் கருத்துகளை நமது மக்கள் இயக்க ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே டீசரில் ஓஹோனு உயர்ந்த காஜல்: டஃப் கொடுப்பாரா நயன்?