Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தில் இளையராஜா பாடல் ரிமிக்ஸ்… வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:42 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோட் படத்தில் ஒரு இளையராஜா பாடல் ரிமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். அந்த பாடல் படத்தில் வரும் இடம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஒரு டைம் டிராவல் படம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments