விஜய் பட நடிகை 100 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓரளவு கொரொனா தொற்றுக் குறைந்து வருகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் மக்களும் பல்வேறு தொழில்பிரிவினர் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இவர்களுக்கு மாநில அரசும், அமைச்சர்களும் , தொண்டு நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளைப் பணமாகவும் பொருளாகவும் வழங்கிவருகின்றனர்.
	
 
									
										
										
								
																	
	
	இந்நிலையில், விஜய்65 பட நடிகையும்  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையுமான பூஜா கெஹ்டே பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 100 குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.  இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.