Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹேப்பி பர்த்டே அர்ச்சு அக்கா - வாழ்த்து சொன்ன பிகில் புல்லிங்கோ!

Advertiesment
ஹேப்பி பர்த்டே அர்ச்சு அக்கா - வாழ்த்து சொன்ன பிகில் புல்லிங்கோ!
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:26 IST)
திருட்டுப்பயலே படத்தை தயாரித்து சினிமாவில் தயாரிப்பாளர் குடும்பமாக பார்க்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து வந்தது தான் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். இந்த நிறுவனத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக இருக்கும் அர்ச்சனா கல்பாத்தி நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் படத்தை தயாரித்து வருகிறார். 

 
பிகில்' - தீபாவளி ரிலீஸ் டென்ஷன் ஒருபக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அசால்டாக எதிர்கொண்டு வரும் அர்ச்சனா கல்பாத்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள்,  விஜய் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிகில் படத்தின் அப்டேட்டுகளை கேட்டு அன்பு தொல்லை செய்யும் ரசிகர்களை ஒருபோதும் முகம் சுளிக்காமல் , சலித்துக்கொள்ளாமல் அவர்கள் எதிர்பார்ப்பதை அடிக்கடி ட்ரீட்டாக கொடுத்து வருகிறார். இதனாலே பிகில் ரசிகர்கள் "அர்ச்சு அக்கா" என செல்லமாக அழைப்பார்கள். 
webdunia
தற்போது பிகில் படத்தின் கடைசி கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று ரிலீஸ் (அக்டொபேர்27) நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் சிங்கப்பெண் அர்ச்சனா கல்பாத்தியிடம் " இனிமேல் அப்டேட் கொடுக்க சொல்லி யார் கிட்ட கேட்போம் மிஸ் யூ அக்கா" என கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூ புகார் சொன்னால் வாய்ப்பு கிடைப்பதில்லை - தமன்னா பளீச்!