Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (10:20 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது என சொல்லப்படுகிறது.

படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எந்த முடிவையும் படக்குழு எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக படத்தின் புதிய போஸ்டர் எதாவது ரிலீஸாகக் கூடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments