Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவிற்கு ஆதரவு கரம் நீட்டும் விஜய் ரசிகர்கள்!!

Advertiesment
சூர்யாவிற்கு ஆதரவு கரம் நீட்டும் விஜய் ரசிகர்கள்!!
, வியாழன், 25 மே 2017 (10:48 IST)
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.


 
 
சென்னையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் பத்திரிக்கையில் மோசமாக செய்திகள் வெளியாகியது.
 
இதற்கு பல்வேறு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. நடிகர் சங்க கூட்டத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனால் அந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக நடிகர்கள் மீது பத்திரிக்கையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
 
எனவே, சூர்யாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் #WeSupportSuriya எனும் டேக்கை கிரியேட் செய்து அதை டிரென்ட் செய்து வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா.... ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியானது!