Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்ட 'மெர்சல்' டிசைனர்

Advertiesment
ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்ட 'மெர்சல்' டிசைனர்
, புதன், 21 ஜூன் 2017 (22:01 IST)
இளையதளபதியை 'தளபதி'யாக மாற்றிவிட்ட 'மெர்சல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளங்களில் பெரும் சுனாமியை கிளப்பி வருகிறது. குறிப்பாக டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 


இந்த நிலையில் 'மெர்சல்' என்ற டைட்டிலையே கொம்பு முதல் வால் வரை டிசைன் செய்த டிசைனர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கிய 'ராஜா ராணி' விஜய் நடித்த 'கத்தி' உள்பட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்த கோபி பிரசன்னா என்பவர்தான் இந்த 'மெர்சல்' போஸ்டைரயும் டிசைன் செய்துள்ளார்.இந்த தகவல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

எனவே இதுவரை இருந்த இடம் தெரியாமல் இருந்த கோபி இன்று ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்டார். லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் கோபிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களளயும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சங்கத் தலைவரை முதல்ல விவசாயம் பண்ணச் சொல்லுங்க” – இயக்குநர் ஆவேசம்