Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகில் டிக்கெட்: முதல் நாள் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்திருந்த விஜய் வெறியன்ஸ்!

பிகில் டிக்கெட்:  முதல் நாள் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்திருந்த விஜய் வெறியன்ஸ்!
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:21 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ரிலீசுக்காக காத்திருக்கும் இப்படத்தின் கடைசிக்கட்ட வேலைகள் தற்போது  படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் பிகில் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில்  டிக்கெட் வாங்க  விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாக பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரீஸில் காதலியுடன் ஜல்ஸா செய்து ஊர் சுற்றும் "டூப்" தோனி!