Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கல் மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுக்கொடுங்கள்! பிரபல நடிகர் கோரிக்கை!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (08:12 IST)
தென்னிந்திய மொழிகளில் வளரும் நட்சத்திரமாக இருக்கும் விஜய் தேவாரகொண்டா மருத்துவர்களுக்காக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வரும் விஜய் தேவாரகொண்டா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வளரும் நட்சத்திரமாக அறியப்படுபவர். நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அவர் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் விடுத்துள்ளார்.

அதில் ‘என் பிரியத்துக்குரியவர்களே… அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். துணிகளால் செய்த மாஸ்க்குகளே கூட இந்த வைரஸ் தொற்று பரவுவதில் உதவும் என நினைக்கிறேன். அதனால் மருத்துவ மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுவிடுங்கள். வெறும் கர்ச்சீஃப், துணி  அல்லது துப்பட்டாவால் செய்த மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். ’ எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பீதியால் மக்கள் தேவைகளை விட அதிகமாக N95 போன்ற மாஸ்க்குகளை அதிகளவில் வாங்குவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மாஸ்க்குகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 45 படத்தின் அடுத்த அப்டேட்டைக் கொடுத்த ஆர் ஜே பாலாஜி!

ரசிகர்களின் கதறலுக்கு செவி கொடுத்தாரா AK?... அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் இல்லையாம்!

அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா தனுஷ்?... திடீரென பரவும் தகவல்!

பாலிவுட் நடிகருடனானக் காதலை பிரேக் அப் செய்தாரா தமன்னா?

பாடகி கல்பனாவுக்கு என்ன ஆச்சு? தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments