Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ அட்டகாசமான டிரைலர்!

liger
, வியாழன், 21 ஜூலை 2022 (11:50 IST)
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது 
 
 இந்த நிலையில் ‘லைகர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளதை அடுத்து விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிரடி குத்து சண்டை திரைப்படமான இந்த படம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனன்யா பாண்டே நாயகியாகவும், ரம்யா கிருஷ்ணன் விஜய்தேவரகொண்டாவின் அம்மாவாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘முழுக் கவனமும் வேலையில்தான்… ‘ திருமணம் குறித்து நித்யா மேனன் பதில்!