Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பிறந்த நாள்: நள்ளிரவு 12.01க்கு 143 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

விஜய் பிறந்த நாள்: நள்ளிரவு 12.01க்கு 143 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
, வியாழன், 22 ஜூன் 2017 (04:42 IST)
இளையதளபதி விஜய் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய 43வது பிறந்த நாளான இன்று மிகச்சரியாக 12.01க்கு வடசென்னை மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை மன்றம் சார்பில் 143 கிலோ கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.



 


இந்த பிறந்த நாள் விழாவில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கேக் வெட்டி கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதுமே இதுவரை இல்லாத அளவில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் பிறந்த நாளில் விஜய் நடித்து வரும் 61வது படமான டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளிவந்து விஜய் ரசிகர்களை சந்தோஷக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' மேஜிக்மேனின் அட்டகாசமான இன்னொரு போஸ்டர்