Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (13:54 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த ஐந்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 
 
ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், தமிழன், கில்லி, போக்கிரி, தலைவா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸில் 50 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், விஜய் தனது 51வது பிறந்தநாளை நாளை மறுநாள்  கொண்டாட இருக்கும் நிலையில், அவரது ஐந்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. குறிப்பாக, விஜய் மூன்று வேடங்களில் நடித்து, அட்லீ இயக்கிய 'மெர்சல்' படம் இன்று வெளியானது. இதை தொடர்ந்து, நாளை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கத்தி', லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய படங்களும், ஜூன் 22ஆம் தேதி 'பகவதி' படமும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
 
அதேபோல், கேரளாவில் 'மெர்சல்', 'கத்தி', 'திருமலை' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. இதனால் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இதுமட்டுமின்றி, விஜய் பிறந்தநாளில், அவர் நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் வீடியோவும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் SMS கூட்டணி… இருவருக்கும் திருப்புமுனையாக அமையுமா?

மீண்டும் 'ஜேம்ஸ் பாண்ட்' கேரக்டரில் நடிக்க விருப்பம்.. கோல்டன்ஐ நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் பேட்டி..!

ரண்வீர் சிங் படக்குழுவினர் 120 பேர் மருத்துவமனையில் அனுமதி… ஷூட்டிங்கில் கொடுக்கப்பட்ட உணவுதான் காரணமா?

ரஜினி சாரை வைத்து வித்தியாசமாக எதுவும் பண்ண முடியாது… ஏ ஆர் முருகதாஸ் கருத்து!

ராப் பாடகர் வேடனைக் கைது செய்ய இடைக்காலத் தடை… நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments