Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகரின் மகளிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!

Advertiesment
பிரபல நடிகரின் மகளிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!
, திங்கள், 4 நவம்பர் 2019 (08:42 IST)
விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய ‘பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் ’குண்டம்மா’ என்று சொல்லி திட்டி உசுப்பேற்றும் வசனத்திற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திராஜா பேட்டில் ஒன்றில் கூறியதாவது:
 
webdunia
''என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால்தான் வேறு வழியின்றி அவர் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன். இருப்பினும் அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார்’ என தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன படம் ? ’கைதி ’படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !மகிழ்ச்சியில் இயக்குநர்!