Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி & சத்யராஜ் நடிக்கும் ‘வள்ளிமயில்’… வெளியான ஃபர்ஸ்ட் லுக்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (16:31 IST)
டிஷ்யூம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். ஒரு கட்டத்தில் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர், இப்போது தன் படங்களுக்கும் மற்ற இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்து வருகிறார். இதையடுத்து இப்பொது ரத்தம் மற்றும் மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறையவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

அடுத்த கட்டுரையில்
Show comments