‘நீங்க சினிமாவுக்கு மீண்டும் வரவேண்டாம் சார்’ – உதயநிதி பற்றி மாமன்னன் இசை வெளியீட்டில் பேசிய பிரபலம்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:59 IST)
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற முன்னொட்டோடு உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், பா ரஞ்சித் மற்றும் விஜய் ஆண்டனி  உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி “எல்லோரும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதை வேறு விதமாக பேசுகிறார்கள். ஆனால் நான் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அங்கேயே இருங்கள் சார்” எனப் பேசியுள்ளார். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்னும் 3 வருடங்களுக்கு எந்த படமும் நடிக்கப் போவதில்லை என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

பத்திகிட்ட அவதார் 3 ரிலீஸ் ஜுரம்.. இந்தியாவில் முன்பதிவில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments