நான் விரைவில் சின்மயிக்குப் பாட வாய்ப்பளிப்பேன்… விஜய் ஆண்டனி உறுதி!

vinoth
புதன், 11 ஜூன் 2025 (08:12 IST)
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

சின்மயி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிகர் ராகுலை மணந்துகொண்டார். ராகுல் மாஸ்கோவின் காவிரி மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளன. வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம், டப்பிங் யூனியனில் பிரச்சனை ஆகியவைக் காரணமாக சின்மயி தமிழில் பாடல்கள் பாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மேடைகளில் அவர் பாடி வருகிறார். சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் அவர் பாடிய முத்தமழை பாடல் வைரல் ஆனது. இதையடுத்து சின்மயி மீண்டும் தமிழில் பாடல்கள் பாடவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி “நான் விரைவில் படங்களுக்கு மீண்டும் இசையமைக்க உள்ளேன். அப்போது சின்மயிக்குக் கண்டிப்பாக பாட வாய்ப்புக் கொடுப்பேன்” என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்