Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சைக்காரன் 2 படத்துக்கு வந்த கதைத் திருட்டு சர்ச்சை சிக்கல்?

பிச்சைக்காரன் 2 படத்துக்கு வந்த கதைத் திருட்டு சர்ச்சை சிக்கல்?
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:17 IST)
விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துவரும் இந்த படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி அவரே இசையமைத்து படத்தொகுப்பு பணியையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை வடக்குழுவினர் வெளியிட்டுள்ளன. மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ் ஆனதை அடுத்து சிங்கப்பூரை சேர்ந்த உதவி இயக்குனர் ஒருவர் இந்த கதை தன்னுடையது எனக் கூறி இப்போது புது சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோருக்கு இந்த கதையைக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவில் பிரபல பாடகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை