Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:55 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஏற்கனவே நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5வது படத்தின் பூஜை ஒன்று நடைபெற்றது. இந்த படம் விஜய் ஆண்டனிக்கு 14 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தின் டைட்டில் ’கோடியில் ஒருவன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றமும் டைட்டிலும் கொண்ட இந்த படம் விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
webdunia
விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிகையாகிறார் டென்னிஸ் வீரர் சானியா மிர்சா: பரபரப்பு தகவல்