Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Mahendran
புதன், 16 அக்டோபர் 2024 (11:25 IST)
விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் "ககன மார்கன்" எனும் டைட்டில் வைக்கப்பட்டு, புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பணிபுரிய இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தில் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், டைட்டில் மற்றும் போஸ்டரை பார்க்கும்போது இது வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி பிறந்தநாளில் ஏன் ஜெயிலர் 2 ப்ரமோஷன் வீடியோ ரிலீஸாகவில்லை?

பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் பாட்டல் ராதா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ‘லாபட்டா லேடீஸ்’!

புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலைக் கவலைக்கிடம்..!

என்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன… அட்லி கொடுத்த அப்டேட்

அடுத்த கட்டுரையில்
Show comments