Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் மாறுகிறதா விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம்?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:22 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியாவில் இதுவரை யாரும் செல்லாத இடங்களான வட இந்தியாவின் டையு டாமன் ஆகிய பகுதிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் இப்போது முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துள்ளனர். படம் முடிந்து சில மாதங்கள் ஆனாலும் இன்னும் படத்தின் வியாபாரம் தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பெயரை இப்போது மாற்றும் முடிவில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு சலீம் 2 என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments