Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் இவர்தான்.. வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (12:17 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.

இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார். சக்தி திருமகன் படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். இதையடுத்து விஜய் ஆண்டனி, அடுத்து தான் நடிக்கும் படத்தை  இயக்க சமீபத்தில் ரிலீஸான ‘ஜெண்டில்வுமன்’ படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments