Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:02 IST)
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த அடுத்த திரைப்படத்தின் சென்சார் தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த படங்களில் ஒன்று தமிழரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பாபு யோகேஸ்வரன் என்பவரது இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த திரைப்படத்தில் சுரேஷ்கோபி, கஸ்தூரி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!