Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 64: விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா!!

தளபதி 64: விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா!!
, புதன், 5 ஜூன் 2019 (08:47 IST)
நடிகை திரிஷா விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தளபதி 64 படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
 
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தளபதி 64 என அழைக்கப்படுகிறது. 
 
லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி 64 படத்தை துவங்குவார் என தெரிகிறது. இந்த படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது. 
webdunia
இந்நிலையில் தளபதி 64 படத்தின் ஹிரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இப்போது விஜய்யுடன் 5வது முறையாக திரிஷா ஜோடி சேரவுள்ளாராம். 
 
ஆம், இந்த படத்தில் முதல் ஹிரோயினாக திரிஷாவும் செக்கெண்ட் ஜிரோயினாக ராஷ்மிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 63' படத்தை முதலில் பார்த்தது நான் தான்: ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்