Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லியோ ரிலீஸூக்கு முன்னர் அடுத்த சிங்கிள் ரெடி…!

லியோ ரிலீஸூக்கு முன்னர் அடுத்த சிங்கிள் ரெடி…!
, சனி, 14 அக்டோபர் 2023 (08:01 IST)
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக உருவாகியுள்ளது.  ஏற்கனவே விஜய் லோகேஷ் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து லியோ படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. இந்நிலையில் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நான் ரெடிதான், பேட்டாஸ் மற்றும் அன்பெனும் ஆயுதம் ஆகிய மூன்று சிங்கிள் பாடல்கள் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்மயியால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்?