இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் காதல், திருமணத்தில் முடிந்த ஒருசில மாதங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
விஜய்-அமலாபால் பரஸ்பர விவாகரத்து கோரிய மனு மீதான தீர்ப்பு நாளை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த இந்த வழக்கு நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பூங்குழலி, பிப்ரவரி மாதம் 21ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
விஜய்-அமலாபால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரியுள்ளதால் இந்த ஜோடிக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றே கருதப்படுகிறது. விவாகரத்துக்கு பின்னர் இருவரும் தனித்தனியே வேறு திருமணம் செய்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருதுதான் பார்க்க வேண்டும்
விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா, ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.