Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய், அஜித் பட நடிகர் வீட்டில் விஷேசம்!

Advertiesment
விஜய், அஜித் பட நடிகர் வீட்டில் விஷேசம்!
, வியாழன், 13 மே 2021 (23:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ஜில்லா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் மகத்.

இவர் நடிகர் சிம்புவின் தீவிரமான ரசிகர் ஆவார். இவரது வீட்டில் விஷேசம் நடைபெற்றதற்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் நடித்த மங்காத்தா என்ற படத்தில் பிரபலமானவர் மகத். பின்னர் ஜில்லா, வந்தா ராஜாவாத்தான் வருவேன் போன்ற படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருவாரியான ரசிகர்களைப் பெற்றார்.

இவர்  சில பிராச்சி மிஸ்ராவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது மிஸ்ரா கர்ப்பமாக இருக்கிறார். இவரது வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மகத் தன் மனைவிக்கு மஞ்சல் பூசி முத்தமிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மகத் மற்றும் அவரது மனைவி மிஸ்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 12 முதல் ஓடிடியில் ‘கர்ணன்’: ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!