Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித், விஜய் யுத்தத்துல இவன் யாரு குறுக்கால? – குழப்பத்தில் தல தளபதி ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (13:38 IST)
நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று வழக்கம்போல அஜித் ரசிகர்கள் அஜித் குறித்த ட்ரெண்டிங்கை செய்து வரும் நிலையில் மூன்றாவதாக ஒரு நடிகரும் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், ட்விட்டரில் விஜய் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேகுகளையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் படங்கள் வெளியானாலும், பிறந்தநாள் என்றாலும் விஜய் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டானால் உடனே அஜித் ரசிகர்களும் களமிறங்கி அவர்கள் அஜித் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து விஜய் ரசிகர்களை ஓவர்டேக் செய்வார்கள்.

இதே அஜித் பிறந்தநாள், பட வெளியீடுகளின் போது விஜய் ரசிகர்களும் செய்வர். இந்த தடவையும் அதே போல விஜய் பிறந்தநாளில் அஜித் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளன. இது வழக்கமான ஒன்றுதான், ஆனால் சம்மந்தமே இல்லாமல் ஒரு புதிய பிரபலத்தின் ஹேஷ்டேகுகளும் இந்த ட்ரெண்டிங் யுத்தத்தில் இணைந்துள்ளது, ஆமாம் பிக்பாஸ் கவின் தான் அந்த பிரபலம்.

பிக்பாஸ் புகழ் கவினுக்கும் இன்றுதான் பிறந்தநாள். இந்நிலையில் கவினுக்கு வாழ்த்து சொல்லி ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள் விஜய், அஜித் ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகளுக்கு இணையாக ட்ரெண்டாகி வருகிறது. இத்தனைக்கும் கவின் பிக்பாஸில் பெற்ற புகழுக்கு பிறகு எந்த படமும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments