Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வெளியாகிறதா மாஸ்டர் ட்ரெய்லர்?: ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!

இன்று வெளியாகிறதா மாஸ்டர் ட்ரெய்லர்?: ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!
, திங்கள், 22 ஜூன் 2020 (09:17 IST)
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மாஸ்டர் ட்ரெய்லர் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவான படம் மாஸ்டர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்புகள் காரணமாக படம் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விஜய் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்து எளிமையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளான இன்று மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் சர்ப்ரைஸாக வெளியாகலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாஸ்டர் ட்ரெய்லரை வெளியிட கோரி ட்விட்டரில் #MasterTrailer என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவின் தங்கச்சி ஆத்மிகாவா.... இது எப்போலிருந்து?