Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 69 படத்தின் தமிழக விநியோக உரிமைக்காக மிகப்பெரிய தொகைக் கொடுக்க தயாரான லலித்!

விஜய் 69 படத்தின் தமிழக விநியோக உரிமைக்காக மிகப்பெரிய தொகைக் கொடுக்க தயாரான லலித்!

vinoth

, வியாழன், 7 நவம்பர் 2024 (15:33 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதற்குள் வெளிநாட்டு உரிமையை துபாயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அதிகபட்ச தொகையாக இந்த படத்துக்கு 75 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல தமிழக விநியோக உரிமைக்கும் மிகப்பெரிய அளவில் போட்டி நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் அதைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக அவர் 100 கோடி ரூபாய் கொடுத்து அந்த உரிமையைக் கைப்பற்றவும் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிட் பட இயக்குனரை அலையவிட்ட தனுஷ்..!