Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுவா?… இணையத்தில் வேகமாக பரவும் தகவல்

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுவா?… இணையத்தில் வேகமாக பரவும் தகவல்
, வெள்ளி, 17 ஜூன் 2022 (09:01 IST)
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பு வரும் ஜூன் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள்ளாக இணையத்தில் ‘வாரிசு’ என்ற தலைப்பைதான் படக்குழு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் இப்போது இணையத்தில் வேகமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ரிலீஸாகும் தமிழ்ப் படங்கள் & வெப் தொடர்… ஒரு பார்வை