Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்கத்தாவில் ‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (18:47 IST)
‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் கல்கத்தாவில் நடக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் மூன்றாவது முறையாக ‘விஜய் 62’ படத்தில் இணைந்துள்ளனர். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஷ் கங்காதரன், ‘விஜய் 62’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதுபெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, சந்தானம் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றுகிறார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈசிஆரில் உள்ள பனையூரில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களின் ஷூட்டிங்கும் கல்கத்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments