Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 60 படப்பிடிப்பில் தமிழ் கற்றுக்கொள்ளும் அபர்ணா விநோத்

Advertiesment
விஜய் 60 படப்பிடிப்பில் தமிழ் கற்றுக்கொள்ளும் அபர்ணா விநோத்
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:07 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக நடிப்பவர் அபர்ணா விநோத்.


 
 
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அப்பா-அம்மாவாக மலையாள நடிகர் விஜயராகவன், மலையாள நடிகை சீமா ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேசும் மலையாள வரவு. மலையாள நடிகையான இவர், விஜய் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.
 
விஜய் 60 படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றி கூறும்போது என்னுடன் நடிக்கும் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ் படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. இருந்தாலும், விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
 
இதுவரை விஜய்யுடன் நடிக்கும் காட்சியை படமாக்கவில்லை. விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மேலும் அபர்ணா விநோத், சூட்டிங் தளத்திலேயே தமிழ் கற்று வருகிறார். விரைவில் சரளமாக தமிழ் பேசவேன் எண்ற நம்பிக்கை உள்ளதாகவும் சொல்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா? பின் இதைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்!