Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறதா?.... தயாரிப்பு தரப்பு வெளியிட்ட அப்டேட்!

விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறதா?.... தயாரிப்பு தரப்பு வெளியிட்ட அப்டேட்!

vinoth

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:36 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் முதல் நாளில் உலகளவில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் படத்தை KVN நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “5 மணிக்கு சந்திப்போம் நண்பா நண்பி..எங்கள் முதல் தமிழ்ப் படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்று மாலை 5 மணிக்கு விஜய்யின் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்"