Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்னேஷ் சிவன் - நயன்தாரா புதிய பங்களாவில் குடிபுகுந்தனர்!

Advertiesment
விக்னேஷ் சிவன் -  நயன்தாரா புதிய பங்களாவில் குடிபுகுந்தனர்!
, சனி, 11 ஜூன் 2022 (20:19 IST)
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  அழைப்பிதல் கொடுக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட கியூ ஆர் கோட்டை  காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியினர் திருமணம் முடிந்து அடுத்த நாள் இருவரும் திருமலை திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துகொண்டனர்.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன்  தம்பதியர் திருமணத்திற்கு முன் பல கோடி மதிப்புள்ள பரிசுகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதில், விக்னேஷ் சிவன் பல  கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்ததாகவும், பதிலுக்கு  நயன் தாரா விக்னேஷ் சிவனுக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் திருமணத்திற்குப் பின்  புதிய பங்களாவில் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகைக்குப் பெண் குழந்தை பிறந்தது..