தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன்… விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:43 IST)
தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் சி எஸ் கே அணியின் விளம்பர படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன், இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த படத்தோடு ‘என்னுடைய முன்மாதிரியை நான் சந்தித்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவரை சந்தித்தது ஒரு நல்ல கதை. விரைவில் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி இயக்கும் வாய்ப்பு வர உள்ளது.  இந்த தருணம் வாழ்க்கை அழகானது என உணரவைத்தது. இதை நிகழ்த்திக் காட்டிய பிரபஞ்சத்துக்கு நன்றி’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தோனியோடு இருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன் என அவர் குறிப்பிட்டுள்ளதால் சி எஸ் கே அணியின் இந்த ஆண்டு ப்ரமோஷன் வீடியோவை அவர் இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments