Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ப்ரதீப்புக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுள்ளேன்… விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:38 IST)
விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் ப்ரதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது “ப்ரதீப்புக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கையில் நான் மோசமானதொரு காலகட்டத்தில் இருந்தேன். அப்போது அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவர் உடனே ஒத்துக்கொண்டு நடிக்க சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் LIK படம்” எனக் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர் சொன்ன கதைப் பிடிக்காமல் அவரை அந்த படத்தில் இருந்து வெளியேற்றியது லைகா நிறுவனம். அதைதான் மோசமான காலகட்டம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments