சௌந்தர்யா தயாரிப்பில் அசோக் செல்வன் நடித்த வெப் சீரிஸ் கைவிடப்பட்டதா?

vinoth
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:29 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதையடுத்துஅவர் ஷோ ரன்னராக கேங்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்து மேற்பார்வையிடுகிறார். இந்த தொடரை அமேசான் ப்ரைம் ஓடிக்காக சௌந்தர்யாவின் மே சிக்ஸ்த் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.  நோவா என்பவர் இயக்குனராக பொறுப்பேற்றார். சத்யராஜ், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இதன் ஷூட்டிங் கடந்த  2023 ஆம் ஆண்டு தொடங்கிய பெரும்பகுதி படமாக்கப்பட்ட நொலையில் தொடருக்கு கேங்ஸ் குருதிப்புனல் என்று டைட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த தொடர் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த தொடர் படமாக்கப்பட்ட வரையில் அமேசான் ப்ரைமுக்கு திருப்தி அளிக்காததால் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments