Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 62 படத்துக்கு விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டும் இல்லை… இதுவும்தானாம்! வெளியான சூப்பர் அப்டேட்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:57 IST)
அஜித் நடிப்பில் உருவாக உள்ள அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

நேற்று வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த படத்தைப் பொறுத்தவரை விக்னேஷ் சிவன் வெறும் இயக்குனர் மட்டுமில்லையாம். அந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம்தான் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments