LIK படத்தில் ரவி வர்மனுக்குப் பதில் இணைந்த புதிய ஒளிப்பதிவாளர்!

vinoth
வியாழன், 25 ஜூலை 2024 (10:26 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவருக்குப் பதிலாக லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் பணியாற்றிய சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். மேலும் படத்துக்கு LIK என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளரா? ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டாங்களே..!

ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

கைதி 2 படத்தின் பணிகளைத் தொடங்கிய லோகேஷ் & தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு!

கமல் & அன்பறிவ் இணையும் படம் தொடங்குவதில் மீண்டும் தாமதம்!

மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய துருவ் விக்ரம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments