Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி படத்தை மீண்டும் ’அவரே ’ இயக்க வேண்டும் - விக்னேஷ் சிவன் விருப்பம்

Advertiesment
ரஜினி படத்தை மீண்டும் ’அவரே ’  இயக்க வேண்டும் -  விக்னேஷ் சிவன் விருப்பம்
, சனி, 12 ஜனவரி 2019 (17:03 IST)
’போடா போடி’யில் ஆரம்பித்து தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வரைக்கும் திரைஉலகில் தனக்கென தனிமுத்திரை பதித்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்  சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் பேட்ட படத்தை பற்றி புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருப்பதாவது:
 
தலைவர் ரஜினி காந்த் தனது தேதிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இன்னொரு தடவை கொடுக்கலாம். ரஜினிஃப்பைடு , விஜய் சேதுபதி ஃபைடு, முக்கியமாக  அனிருத ஃபைடு அனுபவம் கிடைத்தது. அனிருத்தின் சில பாடல்கள் உலகத்தரத்தில் உள்ளது.
 
பேட்ட படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவும் கலக்கியிருக்கிறது. திரைக்கதையும் நன்றாக இருந்தது. இறுதியில் வரும் போது எழுத்தாற்றல் சிறப்பாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துக்கள். தலைவருக்குள் இருக்கும் நடிப்பையும் ஸ்டெலையும் வெளிக்கொணர்ந்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிருத் குரலில் இன்னொரு அற்புதம் - மனதை உருகவைக்கும் பாடல் இதோ..!