Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் கவர்ச்சிப்படம் ; ரவுண்டு கட்டி அடிக்கும் நடிகை வித்யுலேகா

Advertiesment
மீண்டும் கவர்ச்சிப்படம் ; ரவுண்டு கட்டி அடிக்கும் நடிகை வித்யுலேகா
, புதன், 22 நவம்பர் 2017 (10:36 IST)
தமிழ் சினிமா வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். 


 

இந்நிலையில் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது கவர்ச்சிப்புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். 
 
நகைச்சுவை செய்யும் நடிகையாக இருந்தால் உங்களால் செக்ஸியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைப்பார்கள். இது தான் நான், என்னாலும் முடியும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். உடம்பைக் காட்டினால்தான் அழகா என ரசிகர் ஒருவர்  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலர் இப்படி ஒரு அழக காமெடி கேரக்டருக்கு பயன் படுத்திட்டானுகளே... என்றும், நடிகர் ஆர்யா, வித்யுமா ரொம்ப ஹாட் என்று ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளனர்.

webdunia

 

 
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு அதிரடி காட்டியுள்லார் வித்யுலேகா. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால், நீங்கள் உங்களை நேசியுங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இதைக்கண்ட பலரும் அவரை ஏகத்துக்கும் கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமாரின் உறவினரான சினிமா தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை: பைனான்சியர் தலைமறைவு