Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்யாபாலன் நடிக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம்

வித்யாபாலன் நடிக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம்
, புதன், 4 ஜூலை 2018 (22:53 IST)
பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், திருமணம் முடிந்த பின்னரும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம்தான். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆகிய நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைநிறைய படங்கள் வைத்திருப்பவர் வித்யபாலன்
 
இந்த நிலையில் இவருடைய பெற்றோர்கள் ஒரு தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இதுவரை அவர் ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை. ஒருசில படங்களுக்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அவர் இன்னும் ஒரு தென்னிந்திய மொழி படத்தில் கூட நடிக்கவில்லை என்பதே உண்மை
 
இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் என்.டி.ராமாராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வித்யாபாலன் சம்மதம் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்படவுள்ளது. எனவே முதல்முதலாக வித்யாபாலனை தமிழ் படத்திலும் பார்க்கும் வாய்ப்பு மிக விரைவில் கிடைக்கவுள்ளது.
 
webdunia
என்.டி.ஆரின் மனைவி பசவதராகம் கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு-வெங்கட்பிரபு படத்திற்கு கீர்த்திசுரேஷ் நாயகியா?