விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தால் அதிருப்தியில் சூரி!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (15:01 IST)
விடுதலை திரைப்படம் முதலில் ஒரு பாகமாக உருவாக்கப்பட்ட நிலையில் இப்போது அதை இரண்டு பாகங்களாக்கியுள்ளார் வெற்றிமாறன்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் கதை முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தை சுற்றிதான் நடக்கும்படி உருவாக்கியுள்ளாராம் வெற்றிமாறன். இந்த படத்துக்காக, பல படங்களை தவிர்த்த சூரி, இப்போது இதனால் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments