Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுதலை ரிலிஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை ரிலிஸ் எப்போது? வெளியான தகவல்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:26 IST)
நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் ரிலீஸ் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலிஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி வெங்கடாஜலபதியால் சனிக்கிழமை ரிலீஸாகும் டாக்டர்!