Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா, KGF வரிசையில் செல்லும் வெற்றிமாறன்…. விடுதலை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

புஷ்பா, KGF வரிசையில் செல்லும் வெற்றிமாறன்…. விடுதலை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 25 மே 2022 (16:08 IST)
விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இதையடுத்து இப்போது படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் சம்மந்தமாக ஏராளமான காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு பாகங்களையும் படமாக்கி முடித்துவிட்டு குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இந்த படங்களை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தற்போது பரவி வருகின்றன.

Source Valaipechu

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யஷ் சின்ன படம்லாம் நடிக்க மாட்டார்.. ஒன்லி பேன் இந்தியாதான்! – கேஜிஎஃப் தயாரிப்பாளர்!