நடிகர் அமிதாப்பச்சன் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கோடை வெயில் அதிகரித்துள்ளது, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், வீட்டில் வசிப்போர் மின்விசிறி, ஏசி,ஏர்கூலர் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி வெயிலின் புளுக்கத்தில் இருந்து தப்பிக் கொள்கின்றனர்.
அதேசமயம் கட்டிட வேலை செய்வோர், விவசாயிகள் ஆகியோர் இதே வெயிலில்தான் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்காலத்தில் பனை ஓலை, தென்னம் ஓலை ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
சமீபத்தில் ஒரு பைக்கில் சென்ற வாலிபர் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டி, ஒரு பக்கெட்டில் இருந்த நீரை தலையில் ஊற்றி குளித்தபடி சென்றார் இந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நபர் தன் தலையில் குடுமி போன்ற தலைமுடியானது அவர் தலையாட்டிச் செல்லும்போது சுற்றி சுற்றி காற்றாடி மாதிரி செயல்பட்டது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க இது குளுமையை தரும் காற்றாடியைச் சுமந்து செல்லும் நபர் என்று அப்பதிவின் சிலர் பதிவிட்டுள்ளனர்.