அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரை உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியானது என்பதும், இந்த படத்திற்கு பெரும்பாலான நேர்மறை விமர்சனங்களும், சில கலவையான விமர்சனங்களும் உருவாகி வெளியாகி வருவதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மற்றும் எந்தவித பண்டிகையும் இல்லாத நாளில் வெளியான விடாமுயற்சி திரைப்படம், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சினிமா டிராக்கர்கள் இது குறித்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகளவில் இந்த படம் முதல் நாளில் 70 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.