Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? ரசிகர்களை குஷியாக்கிய செய்தி!

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? ரசிகர்களை குஷியாக்கிய செய்தி!

vinoth

, திங்கள், 22 ஜனவரி 2024 (07:41 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் பிறந்தநாளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதி கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் பிரம்மாண்ட திரைப்படம்!